Friday, July 3, 2009

இன்று முதல் நானும் உங்களில் ஒருவன்..!

ண்பர்களே வணக்கம்...

நானும் பல வருடங்களாக பிளாக் எழுதவேண்டும் என தீர்மானம் செய்தேன். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் முடியாமலே போய்விட்டது. பிளாக் ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்த போதெல்லாம் ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபட்டு நேரம் கிடைக்காமலே போய்க்கொண்டிருந்தது.

ஆரம்பிக்க முடியாதமைக்கு என்ன காரணம் என என்னை நானோ கேட்ட போது, அதற்கு நேரம் கிடைக்கவில்லை, என காரணம் சொல்வதைவிட அதில் அதிகமாக என்னை நான் ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்பதையே உணர்ந்தேன்.

எந்த ஒரு விஷயத்தை செய்ய முடியாததற்கும் நாம் பல காரணங்களை முன் வைக்க முடியும், அதேபோல் தான் எனக்கு நானே சில காரணங்களை சொல்லிக்கொண்டே நாட்களை கடத்திக்கொண்டிருந்தேன். ஆனால், இன்று முதல் தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கவேண்டும் என்ற முடிவுடன் பிளாக் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

முடியாது என்று காரணம் சொல்வதைவிட, முடியும் என்று சொல்லி முயற்சி செய்பவனே வாழ்க்கையில் சாதனையாளனாக உருவாகிறான் என்பது ஆன்மீகத்தில் எனக்கு பிடித்த விவேகனந்தர் அவர்களின் போதனை. அதனால் நான் ஆன்மீகவாதி கிடையாது. அதிலும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு.

வீரம் கொண்டு போராடினால் வெற்றி என்பது நம் கைக்கெட்டும் தூரத்தில் தான் உள்ளது என்பது தலைவர் சுபாஷ் சந்திர போஷ் அவர்களின் கருத்து. இந்த விசயத்திலும் எனக்கு கொஞ்சம் ஈடுபாடு உண்டு.

முடியாத காரியங்கள் கூட மனவலிமையோடு போராடினால் முடித்து விடலாம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் நாம் பயணம் சொய்யும் வாழ்க்கையில் சில தவறான முடிவுகளை எடுத்தால் அந்த சிறிய தவறுகளே நாமது லட்சியத்தோடு சேர்த்து, நம்மையும் அழித்துவிடும். தவறான வழியில் சென்றால் அவனுடைய முடிவும் தவறானதாகவே இருக்கும் என்பது நாம் வரளாறுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

முதல் நாள், முதல் அறிமுக பதிவு என்பதால் அதிகமாக எழுதவில்லை.. என்னை நானே அறிமுகப்படுத்திகொண்டு, இன்று முதல் என் எண்ணங்களை பதிவுகளின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
நன்றி பாளை சிவா

4 comments:

ரவி said...

வாங்க பாளை சிவா...வணக்கம்...

யூர்கன் க்ருகியர் said...

நல்வரவு !

அரை மணி நேரம் அரை நாளாக மாறும்போது பீல் பண்ணக்கூடாது நண்பரே !

Anonymous said...

wel come

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்