Monday, July 13, 2009

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

நாமக்கு தினமும் அலுவலகத்திலும் சரி, வெளியிலும் சரி பலபேர் புதியதாக அறிமுகம் ஆகிறார்கள். அதிலிருந்து நல்லவர்களை, திறமைசாலிகளை, சாதிக்கும் மனோபாவம் உள்ளவர்களை தேர்ந்தெத்து அவர்களுடன் நட்பை வளர்க்க வேண்டும் என்று நாம் விரும்புவதில்லை. அவ்வாறு வளர்த்தால், அவர்களைப் போல சாதிக்க வேண்டும் என்ற மனநிலை உருவாகும்.

அதற்கு மாறாக, ஜாலியாக பேசுபவர்கள், அரட்டை அடிப்பவர்கள், பெண்களை / ஆண்களைப் பற்றி கிண்டல் செய்து தவறாக பேசுபவர்கள், தண்ணி அடிப்பவர்கள், புகை பழக்கம் உள்ளவர்கள், இவர்களைப் போன்றவர்களை நோக்கி தான் நமது பார்வை போகிறது. அதற்கு காரணம் ஜாலி மட்டும் தான் வாழ்க்கை என்ற தவறான எண்ணம் தான். அதற்கு வயதும் ஒரு காரணம். வயதை மட்டுமே காரணமாக கூற முடியாது.

ஜாலி மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. ஆனால், ஜாலியும் ஒருபக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். அதேவேளையில் நமது வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய / சாதிக்க வேண்டியதை தவற விட்டு விடக் கூடாது. வாய்ப்புகள் சிலமுறைதான் வரும், நாம் அதை நல்ல முறையில் பயன்படுத்த ஈண்டும் தண்ணி அடித்து, புகைத்து, ஜாலியாக இருப்பவர்களுடன் பழகுவதால், அல்லது அவர்களுடன் சேர்ந்து நேரத்தை கழிப்பதால், நாமும் அவர்களைபோல மாறவதற்கனா சாத்தியக் கூறுகளே அதிகமாக இருக்கிறது. அவர்களுடன் பழகுவதனால் நமக்கு எந்தவிதமான நன்மையும் கிடைப்பதில்லை,அவர்களுக்கும் நம்மிடமிருந்தும் எந்த நன்மைகளும் கிடப்பதில்லை, சில மணிநேர ஜாலியைத்தவிர. அவர்கள் திறமைசாலியாக இருந்தாலும் கூட, அவர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களும் ஜாலியாக இருக்கத்தான் விரும்புவார்கள். நாமும் அவர்களுடன் ஜாலியாக நேரத்தை கழிக்கத்தான் விரும்புவோம்.

ஆனால், நாம் புதியதாக அறிமுகமாகும் நபர்களை திறமைசாலிகளாக, சாதிக்கும் மனோபாவம் கொண்டவர்களாக, உலக அனுபவம் பெற்றவர்களாக தேர்ந்தெடுத்து நட்பை வளர்த்தால், அவர்களுடைய துறையில் நாமும் பல விஷய்ங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெறுவதுடன். நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாக வந்து விடும்.

ஆனால், நாம் அப்பாடிசெய்வதில்லை, ஜாலிநபர்களும், திறமைசாலிகளும் இருக்கும் ஒரு இடத்தில் நாம் இருந்தால், ஜாலி பார்ட்டிகளின் பக்கமே போகிறோம். திறமைசாலிக்ளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்போதும், 'ஹாய்', 'ஹலோ ','சார் எப்படி இருக்கீங்க' என்ற ஒற்றை வார்த்தையுடனும், புன்னகையுடனும் முடித்துக் கொள்கிறேம். இதற்கு மருத்துவ ரீதியாக 'தாழ்வு மனப்பாண்மை' என்கிற நோயும் தான் காரணம். நமது திறமையை நாமே குறைத்து மதிப்பீடு செய்கிறோம்.

நம்மால் அவர்போல சாதிக்க முடியாது. என்னால் அந்த துறையில் போனால சாதிக்க முடியாது. என்று நம்மை நாமே குறைத்து மதிப்பீடு செய்தால், சாதிக்க வேண்டிய நமக்கு எதிரி நாமே என்று ஆகிவிடுகிறோம்.

"சாதனையாளன் பிறப்பதில்லை, சாதனையாளன் உருவாகுவதில்லை, அவன் உருவாக்கப்படுகிறான்" என்று வரலாறுகளில் நாம் படித்திருக்கிறோம். எனவே நம்மை நாமே உருவாக்க வேண்டும்.

நமக்கே தெரியும் இவர் சிறந்தவர். இவருக்கு இந்த துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது. ஆனால், நாம் அவர்களிடம் உறவை வளர்க்காமல், வெட்டித் தனமாக ஜாலியாக நேரத்தை கழிப்பவர்களுடன் சேர்ந்து நமக்கு நாமே பல துறைகளில் தடைக்கல்லாக இருக்கிறோம் என்பது தான் உண்மை.
திறமை உள்ளவர்களை நாம் தான் தேடிச்சென்று , கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எனக்கு அந்த துறைய பற்றி தெரியாது என்று சொல்வதை விட, அந்த துறையை பற்றி தெரிந்த ஒரு நபருடன், நமக்கு நட்பு ஏற்பட்டால் அந்த துறையில் நாமும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

இதில் சில இளைஞர்கள் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களுடன் நட்பை பரிமாறிக் கொள்வதில்லை. அதேவேளையில் வயதானவர்களை கண்டால் கிண்டல் பேச்சு வேறு, அது அவர்களுக்கு ஈகோ பிரச்சனை என்று நினைக்கிறேன். அது ஈகோ பிரச்சனை அல்ல அவர்களுக்கு அவர்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு. ஆனால், சாதனைக்கு வயது கிடையாது. நாம் அந்த மூத்த மனிதருடம் பழகும் போது, அவருடை பலவருட உழைப்பை, அனுபவத்தை, ஞானத்தை சில நாட்களிலேயெ பெறும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

வாழ்ந்து பெற வேண்டிய அறிவை, வாழ்தவரிடம் இருந்து பெறுகிறோம். ஒருவர் அவர் வாழ்நாளில் சம்பாதிச்ச பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லும் மனோபக்குவம் யாருக்கு இருக்கிறது. பணம் என்றால் பெற்றுக்கொள்ளும் நாம் அறிவை மட்டும் பெற முயற்சி செய்வதில்லை.

1 comment:

குப்பன்.யாஹூ said...

yes both should be mixed, Fun and serious both should be there, good post.