Thursday, July 30, 2009

உண்மையான ஞானம் எது?

தங்களைக் கடந்ததே ஆன்மிகம் என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இன்றைய இளைஞர்கள் ஆன்மிகம் என்றால் குறிப்பிட்ட மதத்துக்கு உரியது, என்ற தவறான புரிதலால தான் அதிக அளவில் வருவது இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால், மதங்கள் ஆன்மிக நிலைக்கு அழைத்துச் செல்லும் ஓடங்கள் தான். என்னுடைய கருத்துப்படி கடவுள் என்று சொல்லப்படுவது 'உச்சகட்ட மனிதம் குடிகொண்ட, நெறிதவறாது வாழும் ஆன்மிகவதியே.!'. இதற்கு என்னைக் கவர்ந்த ஒரு மெய்ஞான நிலையை அடைந்த ஒரு இளைஞனின் வரலாறைக் கூறுகிறேன்.

29 வயதுள்ள இளைஞன் ஒருவன் தன்னுடைய உதவியாளர் ஒருவருடன் பயணம் செய்கிறான். அழகான நதிகள், தெளிவான நீரோடைகள், பூந்தோட்டங்கள் என்று பலவிதமான காட்சிகளைக் ரசித்துச்சென்று கொண்டிருந்த அந்த இளைஞனின் கண்களில், சில விசித்திரமான காட்சிகளைக் கானும் வாய்ப்பு ஏற்படுகிறது. அரசனாக எந்தவித துன்பங்களும் இல்லாமல் ராஜவாழ்க்கை வழ்ந்தவனுக்கு, அந்த காட்சிகள் ஒருவிதமான மனபாதிப்பையும், மனவேதனையை உருவாக்குகிறது. அவன் கண்ட அந்தக் காட்சிகள்.

1) ஊனமுற்ற மனிதன் ஒருவன் நடக்க முடியாமல் வேதனைப்படுவதைப் பார்க்கிறான்.

2) கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் படும் அவஸ்தையை பார்க்கிறான்.

3) தெருவோரமாக வீசப்பட்டு, அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசும் பிணம் ஒன்றைக் காண்கிறான்.

4) இவ்வுலக வாழ்க்கையில் பற்றில்லாத, எல்லாவாற்றையும் துறந்த முனிவன் ஒருவனைப் பார்க்கிறான்.

இந்த நான்கு காட்சிகளும் மனிதனின் வாழ்க்கை பற்றிய பலவிதமான கேள்விகளை அவனுக்குள் உருவாக்குகிறது. ஆனால், கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. இதனால், ராஜவாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுகிறது. மனித வாழ்க்கையின் அர்த்தத்தையும், துன்பங்களை போக்குவதற்கான வழிகளைக் காண்டுபிடிப்பதற்கான வழிகளைக் க்ண்டுபிடிப்பதற்காக துறவியாக மாறுகிறான். ஆனால், மனிதனாக வாழ்ந்தும், துறவியாக மாறியும் தேடலுக்கான விடை கிடைக்கவில்லை.

பதிலை தேடி அலையும் இளைஞன், இறுதியாக மனதை ஒருநிலைப் படுத்தும் தியான நிலையை தேர்ந்தெடுக்கிறான். அதாவது போதி மரத்தின் கீழ் அமர்ந்து கடும் தியானம் செய்கிறான். மனதை ஒருநிலைப்படுத்தும் தியானத்தின் முடிவில் மெய்ஞ்ஞான நிலையை அடைகிறான். அற்புதமான மனித வாழ்க்கைக்கான அர்த்தமும் கிடைக்கிறது, அந்த மெய்ஞான நிலையை அடைந்த இளைஞனுக்கு. அந்த இளைஞன் தான் பொளத்த மத புத்தர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சித்தார்த்தர்.

புத்தர் எப்போதுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ சொல்லியதில்லை. மெய்ஞான நிலையை அடைந்த மனிதன் என்றும், இந்த உலகில் பிறந்த மானிடர்கள் யாராக இருந்தாலும், புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் (தேவைக்கு ஏற்ப ஆசைப்படலாம், தேவைக்கு அதிகமான ஆசையே துன்பத்துக்கு காரணம்).

சித்தார்த்தர் என்ற இளைஞன் 'புத்தர்' என்ற தெய்வீக நிலையை எவ்வாறு அடைய முடிந்தது?. வெளி உலகத்தைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளாமல், ராஜபோக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த சித்தார்த்தர். மக்களின் துன்பத்தைப் பார்க்கும் போது அவருள் ஒருவிதமான 'மனிதத்தின் நெருடலை' ஏற்படுத்தியது. அந்த நெருடல் தான் மனித வாழ்க்கையின் விடைதேடும் அளவுக்கு அழைத்துச் சென்று தெய்வீக நிலையை அடைய வைத்தது.

புத்தரும் இளைஞனாக இருந்து, மனிதத்தின் விளைவாக மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் செய்து ஞானம் அடைந்தார். புத்தர் குறிப்பிட்ட மதத்தையோ, கடவுளையோ குறிப்பிடவில்லை. இதிலிருந்தெ தெரிந்துகொள்வது, மனிதத்தை அதிகரித்தால் நாமும் ஞானியாகலாம். ஆனால், இன்றைய இளைஞர்கள் மத்தியில் மனிதம் தாமரை இலை மேல் உள்ள நீர்த்துளி போல அரிதாகத்தான் இருக்கிறது. அவர்களாகவே வெளிப்படுத்துவதுமில்லை, வெளிப்படுத்ததற்கு மதங்கள் பற்றிய தவறான புரிதல் தான் காரணம் என்று கருதுகிறேன்.

புத்தரின் வரலாற்று துளிகள்:

சித்தார்த்தருடைய (புத்தர்) பிறப்பும் விசித்திரமானதாகவே இருந்தது. அவருடைய தந்தை இன்றைய நேபாளத்தில் உள்ள கபிலவத்துவின் மன்னனான சுத்தோதனன். தாயார் மாயா. பிறந்தவுடன் பெற்றோர் வைத்த பெயர் சித்தார்த்தன். எழு நாட்களே அந்தக் குழந்தையின் பெயரை அந்தத் தாயால் உச்சரிக்க முடிந்தது. ஏழாவது நாளே சித்தார்தரின் தாயார் மாயா இறந்துவிடார். தாயின் அன்பான அரவனைப்பில் வளரவேண்டிய குழந்தை, தாயின் முகம் தெரியாமல், தாயாரின் தங்கை வீட்டில் வளரும் சூழ்நிலை ஏற்பட்டது. அரசவம்சத்தில் பிறந்தவன் என்பதால் அவனுடைய தேவைகள் எல்லாவற்றையும் தந்தை நிறைவேற்றி வைத்தார். வாலிப வயதில் காதல் வருவது இயற்கை, அதேபோல சித்தார்த்தரின் 15 வயதிலேயே கதல் ரோஜா வளர ஆரம்பித்தது. அவர் காதலித்தது அத்தை மகள் யசோதரையை. இதனால், எந்தவித கஷ்டங்களும் இல்லாமால் காதல் வெற்றியடைந்ததுடன், திருமணமும் அவருடைய 16 வயதில் நடைபெற்றது. காதலின் சின்னமாக ராகுலன் என்ற குழந்தையும் பிறக்கிறது. இதன் பின்பு தான் அவருடைய வாழ்க்கைப்பாதை மாறுகிறது. நினைத்தது எல்லாம் செய்து முடிக்கும் வல்லமை படைத்த ராஜவாழ்க்கை வாழும் மன்னனாக இருந்தும்கூட, 29 வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டு துறவியாகி, ஞானநிலையை அடைகிறார்.

Wednesday, July 15, 2009

சீரழியும் நமது கலாச்சாரம்..! - என் பார்வை

காலையில் அலுவலகத்தில் பிசியாக வேலை செய்து கொண்டிருந்த போது எனனுடைய கைபேசிக்கு (செல் போன்) குறுந்தகவல் (SMS) ஒன்று வந்தது. தற்போது உள்ள சூழலில் குறுந்தகவல் என்பது சாதாரண விஷயம். நண்பர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான குறுந்தகவல்களை மாறிமாறி அனுப்புவதால், நான் குறுந்தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.


காரணம் வாழ்க்கையில் எப்போதுமே புதுமை வேண்டும். ஆனால், இவர்களோ ஒரே விஷயத்தையே, அதுவும் ஃபார்வேர்ட் என்ற முறையில் அனுப்புவதால், படிக்கும் ஆர்வம் என் போல பலபேருக்கு குறைந்து விட்டது என்றே கருதுகிறேன். ஆனால், நான் மதிய உணவு இடைவேளையின் போது தவறவிட்ட அழைப்புகள், படிக்காமல் விட்ட குறுந்தகவல்களை பார்ப்பது வழக்கம்.


அதேபோல இன்றும் வந்த குறுந்தகவல்களை இடைவேளையின் போது படித்து கொண்டிருந்தேன். வந்த குறுந்தகவல்களில் ஒன்று வித்தியாசமான முறையில் இருந்தாது. அதாவது " கோயம்புத்தூர், திருச்சி, சென்னை போன்ற இடங்கங்களில் உங்களுக்கு நண்பர்கள் வேண்டுமா? நண்பர்கள் தேவைப்பட்டால் எங்களின் இலவச அழைப்பு எண்ணுக்கு அழைக்கவும்" என்று எண்ணும் குறிப்பிட்டு வந்திருந்தது.


அதில், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள்/ மாணவர்கள், என்று பல தரப்பட்ட விஷயம் குறிப்பிடப்பட்டு இருந்தது. முதலில் எனக்கு புரியவில்லை. அந்த குறுந்தகவலை பற்றி நண்பர்களுடன் பேசும் போது, நண்பர்களின் மூலம் கிடைத்த பலவகையான தகவல்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே அதுபற்றி தொரிந்து கொள்வதற்காக சென்னையிலேயே பல வருடங்களாக பணிபுரிந்து வரும் நண்பர் ஒருவருடன் கேட்டபோது. அவர் தன்னுடைய அனுபவங்களை அனுபவித்தது போல (அனுபவப் பட்டவராக்கக் கூட இருக்கலாம்) எல்லா விசயங்களையும் என் முன்னே வைத்தார்.


இந்த விசயங்களை பிளாக்கில் எழுதவேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால், நமது நாட்டின் காலாச்சாரம் இந்த அளவுக்கு சீரழியும் போது என் போன்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. நாம் தமிழர்களின் வாழ்க்கை முறையும், காலாச்சாரமும் மற்ற இனத்தவர்களே பாராட்டும் அளவிற்கு பெருமை வாய்ந்தது அல்லாவா.. அப்படியான காலாச்சாரத்தில் பிறந்து வழந்து வரும் நாம், நமது காலாச்சாரம் சீரழியும் போது ஏற்றுக்கொள்ள முடியுமா?
உலகிலேயே அதிக மூளைத்திறன் கொண்டவர்கள் என்று யூதர்களை குறிப்பிடும் வரலாற்று நூல்கள் கூட, யூதர்களுக்கு சமமாக தமிழர்களைன் திறனை வைக்கிறது. அப்படி பாரம்பரியமிக்க இனம் தமிழர் இனம். அதனால் அந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.


அதாவது, பணம் சம்பாதிப்பதற்காக, நூதன முறையில் செயல்படும் ஒரு நெட்வொர்க் தான் இந்த பிரிவு. யாராவது தொடர்புகொண்டு நண்பர்களைப் பெற விரும்புவதாக சொன்னல், சிலர், பதிவு கட்டணம் வசூலிப்பார்களாம். அதிகமானவர்கள் அதுகூட வசூலிப்பது கிடையாதாம்.( இலவசம் என்ற முறையில் மொத்தமாக அள்ளி விடலாம் அல்லவா). நம்பும் விதத்தில் பேசுவதில் கில்லாடிகளாம்.


தொடர்ந்து, நாம் சொன்னது போல சில பெண்களின் / ஆண்களின் தொலைபேசி எண்களைக் கொடுப்பார்களாம், அல்லது சில பெண்களை / ஆண்களின் அறிமுகப்படுத்தி வைப்பார்களாம். அந்த அறிமுகப்படுத்தப் பட்ட்வர்களை நெருக்கமாக பழக வைத்து அவர்களின் மூலம் அந்த நபர் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற்று பணத்துக்காக பிளாக்மெயில் செய்வது தான் அவர்களுடைய வேலை.


இன்னோரு பிரிவு, வரும் நபர்களால் தங்களுக்கு எந்தவித தீங்கும் வராது என்று தெரிந்தவுடன், தங்களிடம் பல பெண்கள் / ஆண்கள் உள்ளார்கள், நீங்கள் விரும்பினால் உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி, ஆண்களை / பெண்களை அவர்களின் வலையில் விழ வைத்து பணம் சம்பாதிப்பதுடன். அவர்கள் வசதியுள்ள பார்ட்டிகள் என்றால் பிளாக் மெயிலும் செய்வார்களாம்.


இந்த பதிவு உஷாராக, எச்சரிக்கையாக் இருப்பதற்காகத்தான் பதிவு செய்கிறேன். ஒரு பெண்ணு கவர்சியாக பேசும்போது ஆரம்பல் நால்லாத்தான் இருக்கும். ஆனால் சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு பலபேர் சீரழிந்ததாகவும். விபரம் தெரியாத நபர்கள் எளிதாக அவர்களின் வலையில் விழந்து விடுவதாகவும் சொன்னார்.


இதைப்பற்றி இன்னும் பல விஷயங்கள் எழுத உள்ளேன். இனி வரும் பதிவுகளில் அவை தொடரும்.

Monday, July 13, 2009

நமக்கு நாமே வைக்கும் ஆப்பு..! -என் பார்வை

நாமக்கு தினமும் அலுவலகத்திலும் சரி, வெளியிலும் சரி பலபேர் புதியதாக அறிமுகம் ஆகிறார்கள். அதிலிருந்து நல்லவர்களை, திறமைசாலிகளை, சாதிக்கும் மனோபாவம் உள்ளவர்களை தேர்ந்தெத்து அவர்களுடன் நட்பை வளர்க்க வேண்டும் என்று நாம் விரும்புவதில்லை. அவ்வாறு வளர்த்தால், அவர்களைப் போல சாதிக்க வேண்டும் என்ற மனநிலை உருவாகும்.

அதற்கு மாறாக, ஜாலியாக பேசுபவர்கள், அரட்டை அடிப்பவர்கள், பெண்களை / ஆண்களைப் பற்றி கிண்டல் செய்து தவறாக பேசுபவர்கள், தண்ணி அடிப்பவர்கள், புகை பழக்கம் உள்ளவர்கள், இவர்களைப் போன்றவர்களை நோக்கி தான் நமது பார்வை போகிறது. அதற்கு காரணம் ஜாலி மட்டும் தான் வாழ்க்கை என்ற தவறான எண்ணம் தான். அதற்கு வயதும் ஒரு காரணம். வயதை மட்டுமே காரணமாக கூற முடியாது.

ஜாலி மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது. ஆனால், ஜாலியும் ஒருபக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். அதேவேளையில் நமது வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய / சாதிக்க வேண்டியதை தவற விட்டு விடக் கூடாது. வாய்ப்புகள் சிலமுறைதான் வரும், நாம் அதை நல்ல முறையில் பயன்படுத்த ஈண்டும் தண்ணி அடித்து, புகைத்து, ஜாலியாக இருப்பவர்களுடன் பழகுவதால், அல்லது அவர்களுடன் சேர்ந்து நேரத்தை கழிப்பதால், நாமும் அவர்களைபோல மாறவதற்கனா சாத்தியக் கூறுகளே அதிகமாக இருக்கிறது. அவர்களுடன் பழகுவதனால் நமக்கு எந்தவிதமான நன்மையும் கிடைப்பதில்லை,அவர்களுக்கும் நம்மிடமிருந்தும் எந்த நன்மைகளும் கிடப்பதில்லை, சில மணிநேர ஜாலியைத்தவிர. அவர்கள் திறமைசாலியாக இருந்தாலும் கூட, அவர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களும் ஜாலியாக இருக்கத்தான் விரும்புவார்கள். நாமும் அவர்களுடன் ஜாலியாக நேரத்தை கழிக்கத்தான் விரும்புவோம்.

ஆனால், நாம் புதியதாக அறிமுகமாகும் நபர்களை திறமைசாலிகளாக, சாதிக்கும் மனோபாவம் கொண்டவர்களாக, உலக அனுபவம் பெற்றவர்களாக தேர்ந்தெடுத்து நட்பை வளர்த்தால், அவர்களுடைய துறையில் நாமும் பல விஷய்ங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெறுவதுடன். நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாக வந்து விடும்.

ஆனால், நாம் அப்பாடிசெய்வதில்லை, ஜாலிநபர்களும், திறமைசாலிகளும் இருக்கும் ஒரு இடத்தில் நாம் இருந்தால், ஜாலி பார்ட்டிகளின் பக்கமே போகிறோம். திறமைசாலிக்ளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்போதும், 'ஹாய்', 'ஹலோ ','சார் எப்படி இருக்கீங்க' என்ற ஒற்றை வார்த்தையுடனும், புன்னகையுடனும் முடித்துக் கொள்கிறேம். இதற்கு மருத்துவ ரீதியாக 'தாழ்வு மனப்பாண்மை' என்கிற நோயும் தான் காரணம். நமது திறமையை நாமே குறைத்து மதிப்பீடு செய்கிறோம்.

நம்மால் அவர்போல சாதிக்க முடியாது. என்னால் அந்த துறையில் போனால சாதிக்க முடியாது. என்று நம்மை நாமே குறைத்து மதிப்பீடு செய்தால், சாதிக்க வேண்டிய நமக்கு எதிரி நாமே என்று ஆகிவிடுகிறோம்.

"சாதனையாளன் பிறப்பதில்லை, சாதனையாளன் உருவாகுவதில்லை, அவன் உருவாக்கப்படுகிறான்" என்று வரலாறுகளில் நாம் படித்திருக்கிறோம். எனவே நம்மை நாமே உருவாக்க வேண்டும்.

நமக்கே தெரியும் இவர் சிறந்தவர். இவருக்கு இந்த துறையில் நல்ல அனுபவம் இருக்கிறது. ஆனால், நாம் அவர்களிடம் உறவை வளர்க்காமல், வெட்டித் தனமாக ஜாலியாக நேரத்தை கழிப்பவர்களுடன் சேர்ந்து நமக்கு நாமே பல துறைகளில் தடைக்கல்லாக இருக்கிறோம் என்பது தான் உண்மை.
திறமை உள்ளவர்களை நாம் தான் தேடிச்சென்று , கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எனக்கு அந்த துறைய பற்றி தெரியாது என்று சொல்வதை விட, அந்த துறையை பற்றி தெரிந்த ஒரு நபருடன், நமக்கு நட்பு ஏற்பட்டால் அந்த துறையில் நாமும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

இதில் சில இளைஞர்கள் குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களுடன் நட்பை பரிமாறிக் கொள்வதில்லை. அதேவேளையில் வயதானவர்களை கண்டால் கிண்டல் பேச்சு வேறு, அது அவர்களுக்கு ஈகோ பிரச்சனை என்று நினைக்கிறேன். அது ஈகோ பிரச்சனை அல்ல அவர்களுக்கு அவர்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு. ஆனால், சாதனைக்கு வயது கிடையாது. நாம் அந்த மூத்த மனிதருடம் பழகும் போது, அவருடை பலவருட உழைப்பை, அனுபவத்தை, ஞானத்தை சில நாட்களிலேயெ பெறும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

வாழ்ந்து பெற வேண்டிய அறிவை, வாழ்தவரிடம் இருந்து பெறுகிறோம். ஒருவர் அவர் வாழ்நாளில் சம்பாதிச்ச பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லும் மனோபக்குவம் யாருக்கு இருக்கிறது. பணம் என்றால் பெற்றுக்கொள்ளும் நாம் அறிவை மட்டும் பெற முயற்சி செய்வதில்லை.

Saturday, July 11, 2009

சென்னை நகரமும், பேருந்து பயணமும்..:என் அனுபவம்..!

நான் வசிக்கும் இருப்பிடத்துக்கும் வேலை செய்யும் அலுவலகத்துக்கும் இடையில் 7 கிலோ மீட்டர் தூரம். பேருந்தில் பயணம் செய்து தான் அலுவலகம் போகவேண்டும். இருப்பிடத்திலிருந்து காலை சுமார் 7.30-க்குள் கிளம்பினால் தான், அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் காத்திருத்தலுக்குப் பின் பேருந்து கிடைக்கும். இல்லாவிட்டால் அன்று அலுவலக விதிமுறைக்குட்பட்ட நேரம் கடந்து அலுவலகம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

இதை தவிர்ப்பதற்காகவே காலையில் 7.30 -க்கு முன்னதாகவே பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிடுவேன், வழக்கம் போல பேருந்துக்காக காத்திருக்கவேண்டும். சென்னை நகர பேருந்துகளைப் பற்றி சென்னை வாசிகளுக்கு தெரியும். பேருந்தில் பயணம் செய்து அலுவலகம் செல்வபவர்களுக்கு அதன் அனுபவம் பழகிப்போயன இன்றாக இருக்கும்.
ஆனால், என்போன்ற சில மாதங்களாக சென்னை நகர பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு அது ஒரு புதுவித வித்தியாசமான, அதேநேரத்தில் விசித்திரமான அனுபவமாகத்தான் இருக்கும்.


சென்னை நகரப் பேருந்துகளில் அதிகமானவை (சொகுசுப் பேருந்துகளைத் தவிர்த்து) வாலிபத்தை இழந்து, வாழும் காலத்தையும் கடந்து, முதிர்ந்த வயதில் தள்ளாடி, தள்ளாடி தன்னுடைய பணியை செய்கிறது. திறமைக்கு அதிகமாக உழைப்பது எது..? என்று யாராவது என்னைக் கேட்டால் 'சென்னை நகர பேருந்துகள்' என்று தான் சொல்வேன்.

அந்த அளவுக்கு தயாரிக்கப்படும் போது நிர்ணயிக்கப்பட்ட (ஆண்டு) வயதைக் கடந்து இயங்குகிறது. அதாவது இயக்கப்படுகிறது. பேருந்துகள் நிறுத்தத்தை நெருங்கும் முன்பே இரைச்சலுடன் கூடிய ஒருவித சத்தத்தை இசையாக பாடிக்கொண்டு ( சங்கு ஊதுவது போல ) தான் வரும். அதற்கு சிறப்புக் காரணமும் ஒன்று உண்டு. என்னவென்றால் நாற்பது இருக்கைகளுக்கும் குறைவாகக் கொண்ட நகர பேருந்துகள் குறைந்தது 100 -க்கும் அதிகமான பயணிகளை சுமந்து கொண்டு வருவது தான்.

நான் காத்திருக்கும் நிறுத்தத்தில் குறைந்தது 30, 40 பேர் இருப்பார்கள். சில பேருந்துகள் நிற்காமலே போய்விடும். ஒருசில பேருந்துகள் நிறுத்தத்தை தாண்டி சிறிது தூரம் சென்று தான் நிறுத்தப்படும்.பேருந்தின் வாசலில் உள்ள மூன்று படிகளிலுமே குறைந்தது 15 -க்கும் அதிகமான இளைஞர்கள் (முதியவர்கள் கூட) பயணிக்கின்றனர். சிலவேளைகளில் பெண்கள் கூட இரண்டாவது, மூண்றாவது படிகளில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட இடத்துக்கு போய்சேர வேண்டுமல்லவா. ஆண்களே அவதிப்படும் போது, பெண்களின் நிலமையைப் பார்க்கும் போது பரிதாபத்துக்கு உரியாதாக இருக்கும்.

படியில் உள்ளவர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே வருவது முடியாத காரியம். ஆனால், பெண்களை மயக்க திறமையைக் காட்டுவதாக எண்ணி ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி ஏறும் இளைஞர்கள் (தவிர்க்க முடியாத காரணத்தால் நானும் படியில் ந்ன்றி பயணம் செய்திருக்கிறேன்) சிலர் இருப்பதால் கிடைக்கும் இடத்தைப் பயன்படுத்தி உள்ளே சென்றுவிடலாம். அடுத்த நிறுத்தத்திலும் ஒரு கூட்டமே இந்த பேருந்துக்காக காத்திருப்பார்கள். நடத்துனர் அவருடைய பாணியில் "உள்ள போப்பா... உள்ள போப்பா" என்று சத்தம் போடுவார்.

உள்ளே போகவெண்டும் என்றால் பேருந்தின் இடது, வலது அல்லது பின்புற (ஏன் முன்புற) கண்ணாடியை உடைத்துக்கொண்டுதான் போகமுடியும். ஒவ்வொரு நிறுத்தத்திலும் கூட்டம் ஏறும் போதும் (இடம் கிடைக்காததால்) நம்முடைய காலனிகள் கூட பயணம் செய்யும் இடமாக மாறிவிடும். நான் மற்றவர்களுடைய காலனிகளிலும் பயணம் செய்திருக்கிறேன். பயணிகளின் நெரிசலினால் ஒவ்வொருவருடைய உடலில் (பலர் குளிக்காமலும், சிலர் பல சுத்தம் செய்யாத ஆடைகளையே அணிந்து வருவதால்) இருந்து வரும் ஸ்மல் -லும் ஒன்று சேர்ந்து ஒருவிதமான அருவருக்கத்தக்க ஸ்மலை உருவாக்குகிறது. அந்த ஸ்மலால் வாந்தி வருவது போல ஒரு உணர்வு இருக்கும். ஆனால், இப்போது பழகிப்போய் விட்டது. அந்த ஸ்மல் இல்லாமல் பயணம் செய்தால், பயணம் செய்த உணர்வே இப்போது ஏற்படுவதில்லை.....

பேருந்தில் நிலத்தகராறுக்குப் (இடம்) பஞ்சம் இருக்காது. வாய்க்கால் வரப்பு தகராறு, என பலவகையான தகராறுகள் நடந்துகொண்டு இருக்கும். நடத்துனர் அவருடைய ஆசணத்தை விட்டு நகருவதில்லை (சென்னையில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்). நாம் எந்த திசையில் இருந்தாலும் அருகில் உள்ளவரிடம் காசு கொடுத்து 'பாஸ் பண்ணுங்க சார்' என்று சொல்லித்தான் பயணச்சீட்டு வாங்க முடியும். அதிலும் ஐந்து பத்து நபர்களிடம் காசு கைமாறி பயணச்சீட்டு நமக்கு வந்து சேருவதற்கு குறைந்தது அரை மணி நேரம் கூட ஆகலாம். அதிலும், சில்லறை இல்லாமல் ரூ. 20, ரூ.50 போன்ற நோட்டைக் கொடுத்தால் சிலவேளைகளில் டிக்கெட்டும் வருவதில்லை, மீதிப்பணமும் வருவதில்லை.

காரணம், பணம் வாங்கியவர் ஏதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிடுவார். அவருக்கு காலை உணவுக்கு பணம் கிடைத்து விட்டது அல்லவா..

ஜெமினி பாலம் போன்ற இடங்களில் உள்ள ஏற்றங்களில் பேருந்து செல்லும் போது, மூச்சு வாங்கி வாங்கி இழுப்பதைப் பார்த்தால், நமக்கே பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கும். ஓட்டுனர் ஹியர் போடும்போது பார்த்தால் எந்தநேரத்தில் ஹியார் கையோடு வரும் என்று தெரியாத நிலையில் இருக்கும். சில நேரங்களில் (பல தடவை நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்) ஏற்றங்களிலும், சாதாரண இடங்களிலும் ஹார்ட் அட்டாக் (பழுதடைந்து) வந்து பேருந்து நின்றுவிடும்.

அப்படி ஆகிவிட்டால், வேறு பேருந்தில் தான் போகவெண்டும். இவ்வாறு ஒவொரு நாள் பேருந்து பயணமும் பல வகையான அனுபவத்தை கற்றுக் கொடுத்துக்கொண்டோ இருக்கிறது. அனுபவங்கள் எல்லா துறைகளிலும், எல்லா இடங்களிலும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கும். அதேபோல எனக்கும் இது ஒரு வித்தியாசமான பயணமாகவே இருப்பதால் தான் இன்று பதிவாக எழுதுகிறேன்.

Thursday, July 9, 2009

லட்சியமில்லாத வாழ்க்கையா? அதிக ஈடுபாடு ஆபத்து..!

சில பேரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். அவர்கள் எந்த விதமான லட்சியங்களும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. இதனால் அவர்களுக்கும் பயன் கிடைப்பதில்லை, அதேவேளையில் அவர்களைச் சுற்றி உள்ள உறவுகளுக்கும் பயன் கிடைப்பதில்லை. ஆனால், அந்த உறவுகளுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருப்பதில்லை.

வாழும் காலம் கொஞ்சம். அதாவது நமது நாட்டின் சராசரி ஆயுட்காலம் 55 வருடங்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகிறது. அதில் குழந்தைப் பருவத்தில் விபரம் தெரியாமலே சில வருடங்களை இழந்து விடுகிறோம். வாழும் காலத்திலேயே தூக்கத்துக்காக பாதியை ஒதுக்கி விடுகிறோம். அப்படி இருக்கும் போது, விபரம் தெரிந்து வாழும் மணித்துளிகளாவது தனக்கு நன்மை கிடைக்காமல் போனாலும், தன்னை சுற்றியுள்ள உறவுகளுக்கு நன்மை கிடைக்கும் விதத்தில் வாழலாம் அல்லவா.

பிறப்பதற்கு முன்னமே பல உறவுகள் உருவாக்கப்பட்டு விடுகின்றன. பிறக்கும் போது தாய், தந்தை, மாமா, மாமி, சித்தப்பா, பெரியப்பா என பல உறவுகளுடன் தான் பிறக்கிறேம். உறவுகளினால் பின்னிப் பினைக்கப்பட்டு, அதன் ஒரு அங்கமாக இருக்கும் போது, அவர்களின் சந்தேசமும் நமக்கு முக்கியம் அல்லவா..

வாழும் காலத்தில் நாமும் சில உறவுகளை( கணவன்/மனைவி, நன்பன் போன்ற ) உருவாக்கிக் கொள்கிறோம். அந்த உறவுகளை தேர்ந்துடுக்கும் போதும் பல பேர் சரியான முறையில் பயன்படுத்தாமல், அதன்பின் வாழ்க்கையில் சீரழிந்து வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றி விடுகிறார்கள்.

இதற்கு எல்லாம் காரணம் என்ன? எந்த விதமான லட்சியமும் இன்றி, எப்படியும் வழலாம் என்ற நோக்கத்தில் வாழ்வதால் தான் என்று கருதுகிறேன். எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும் அலசி ஆராய்ந்து, அந்த செயலில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு, இறுதியில் நம் ஆழ்மனதுக்கு எது சரியாக தோன்றுகிறதோ.. அதையே முடிவாக எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் பிரச்சினைகள் ஓரளவு குறையும் என்பது என் கருத்து. அந்த முடிவு சரியானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.கண்டுபிடிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் ஆறறிவுடைய மனிதன் தானே!.

திறமையானவர்களிடம் ஆலோசனை கேட்பது தவறு கிடையாது. அவர்களின் பல வருட ஞானத்தை நாம் சில மணிநேரங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதில்லை எப்றே கருதுகிறேன்.
அதேவேளையில் எந்த தேவைகளின் மீதும் அளவுக்கு அதிகமான ஈடுபாட்டை உருவாக்குவதும் தவறு. அளவுக்கு அதிகமான ஈடுபாடு தான், அந்த தேவைகள் பூர்த்தி ஆகாமல் தோல்வி அடையும் போது ஒருவித மனவேதனையை உருவாக்குகிறது. வாழ்க்கையின் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த வெறுப்பு தான் பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்களை செய்ய தூண்டுகிறது என்று நினைக்கிறேன்.

சிலர் சொல்வார்கள் நன்பானால் என் வாழ்க்கை சீரழிந்தி விட்டது. உறவினர்களால் வாழ்க்கை சீரழிந்தி விட்டது. காதலித்து அவள் ஏமாற்றி விட்டாள் அதனால் தான் குடிகாரணாக மாறிவிட்டேன். என்று.
இவர்கள்து காரணங்களை நான் ஏற்றுக்கொளவதில்லை. நன்பனைத் தேர்ந்தெடுத்தது நீ தானே.. ஏன் அவனை குறை சொல்ல வேண்டும். அவளை காதலித்தது நீ தானே.. அந்த பெண்ணை ஏன் குற்றம் சொல்ல வேண்டும். நீ சரியான முறையில் தேர்ந்தெடுக்கவில்லை அது உன்னுடைய தவறு. நீ தான் நல்லது எது? கெட்டது எது என்று கண்டுபிடிக்க வேண்டும்.

சிலர் தாங்கள் செய்யும் தவறுக்கு பல காரணங்கள் முன் வைப்பார்கள். அது அவர்கள் தாங்கள் செய்யும் தவறை தவறு என்று ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்.அதனால், தாங்கள் செய்வது சரி என்று சொல்வதற்காகத்தான்

'அழவுக்கு அதிகமானால் அமுதமும் நஞ்சு" என்பது போல தேவைகைளின்
மீது தேவையான அளவு மட்டுமே ஈடுபாட்டை உருவாக்க வேண்டும். அதிகமாக உருவானால் நமக்கு அழிவாக மாறி விடும். ஆனால் உலகில் உள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும். எல்லாத்துறைகளைப் பற்றியும் தெரிந்து அனுபவித்து வாழ்க்கை பூர்த்தியடைந்த முழு மனிதனாக இறுதிய்ல் முடித்துக்கொள்ள வேண்டும். நாம் இல்லதா நேரத்திலும் உலகத்தில் சிறுது காலமாவது நம் பெயர் சொல்லும் விதத்தில் எதையாவது நல்ல செயல்களை செய்து விட்டு மறைய வேண்டும்.

Friday, July 3, 2009

இன்று முதல் நானும் உங்களில் ஒருவன்..!

ண்பர்களே வணக்கம்...

நானும் பல வருடங்களாக பிளாக் எழுதவேண்டும் என தீர்மானம் செய்தேன். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் முடியாமலே போய்விட்டது. பிளாக் ஆரம்பிக்க வேண்டும் என முடிவெடுத்த போதெல்லாம் ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபட்டு நேரம் கிடைக்காமலே போய்க்கொண்டிருந்தது.

ஆரம்பிக்க முடியாதமைக்கு என்ன காரணம் என என்னை நானோ கேட்ட போது, அதற்கு நேரம் கிடைக்கவில்லை, என காரணம் சொல்வதைவிட அதில் அதிகமாக என்னை நான் ஈடுபடுத்திக்கொள்ளவில்லை என்பதையே உணர்ந்தேன்.

எந்த ஒரு விஷயத்தை செய்ய முடியாததற்கும் நாம் பல காரணங்களை முன் வைக்க முடியும், அதேபோல் தான் எனக்கு நானே சில காரணங்களை சொல்லிக்கொண்டே நாட்களை கடத்திக்கொண்டிருந்தேன். ஆனால், இன்று முதல் தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கவேண்டும் என்ற முடிவுடன் பிளாக் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

முடியாது என்று காரணம் சொல்வதைவிட, முடியும் என்று சொல்லி முயற்சி செய்பவனே வாழ்க்கையில் சாதனையாளனாக உருவாகிறான் என்பது ஆன்மீகத்தில் எனக்கு பிடித்த விவேகனந்தர் அவர்களின் போதனை. அதனால் நான் ஆன்மீகவாதி கிடையாது. அதிலும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு.

வீரம் கொண்டு போராடினால் வெற்றி என்பது நம் கைக்கெட்டும் தூரத்தில் தான் உள்ளது என்பது தலைவர் சுபாஷ் சந்திர போஷ் அவர்களின் கருத்து. இந்த விசயத்திலும் எனக்கு கொஞ்சம் ஈடுபாடு உண்டு.

முடியாத காரியங்கள் கூட மனவலிமையோடு போராடினால் முடித்து விடலாம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் நாம் பயணம் சொய்யும் வாழ்க்கையில் சில தவறான முடிவுகளை எடுத்தால் அந்த சிறிய தவறுகளே நாமது லட்சியத்தோடு சேர்த்து, நம்மையும் அழித்துவிடும். தவறான வழியில் சென்றால் அவனுடைய முடிவும் தவறானதாகவே இருக்கும் என்பது நாம் வரளாறுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

முதல் நாள், முதல் அறிமுக பதிவு என்பதால் அதிகமாக எழுதவில்லை.. என்னை நானே அறிமுகப்படுத்திகொண்டு, இன்று முதல் என் எண்ணங்களை பதிவுகளின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
நன்றி பாளை சிவா