Wednesday, July 15, 2009

சீரழியும் நமது கலாச்சாரம்..! - என் பார்வை

காலையில் அலுவலகத்தில் பிசியாக வேலை செய்து கொண்டிருந்த போது எனனுடைய கைபேசிக்கு (செல் போன்) குறுந்தகவல் (SMS) ஒன்று வந்தது. தற்போது உள்ள சூழலில் குறுந்தகவல் என்பது சாதாரண விஷயம். நண்பர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான குறுந்தகவல்களை மாறிமாறி அனுப்புவதால், நான் குறுந்தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.


காரணம் வாழ்க்கையில் எப்போதுமே புதுமை வேண்டும். ஆனால், இவர்களோ ஒரே விஷயத்தையே, அதுவும் ஃபார்வேர்ட் என்ற முறையில் அனுப்புவதால், படிக்கும் ஆர்வம் என் போல பலபேருக்கு குறைந்து விட்டது என்றே கருதுகிறேன். ஆனால், நான் மதிய உணவு இடைவேளையின் போது தவறவிட்ட அழைப்புகள், படிக்காமல் விட்ட குறுந்தகவல்களை பார்ப்பது வழக்கம்.


அதேபோல இன்றும் வந்த குறுந்தகவல்களை இடைவேளையின் போது படித்து கொண்டிருந்தேன். வந்த குறுந்தகவல்களில் ஒன்று வித்தியாசமான முறையில் இருந்தாது. அதாவது " கோயம்புத்தூர், திருச்சி, சென்னை போன்ற இடங்கங்களில் உங்களுக்கு நண்பர்கள் வேண்டுமா? நண்பர்கள் தேவைப்பட்டால் எங்களின் இலவச அழைப்பு எண்ணுக்கு அழைக்கவும்" என்று எண்ணும் குறிப்பிட்டு வந்திருந்தது.


அதில், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள்/ மாணவர்கள், என்று பல தரப்பட்ட விஷயம் குறிப்பிடப்பட்டு இருந்தது. முதலில் எனக்கு புரியவில்லை. அந்த குறுந்தகவலை பற்றி நண்பர்களுடன் பேசும் போது, நண்பர்களின் மூலம் கிடைத்த பலவகையான தகவல்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே அதுபற்றி தொரிந்து கொள்வதற்காக சென்னையிலேயே பல வருடங்களாக பணிபுரிந்து வரும் நண்பர் ஒருவருடன் கேட்டபோது. அவர் தன்னுடைய அனுபவங்களை அனுபவித்தது போல (அனுபவப் பட்டவராக்கக் கூட இருக்கலாம்) எல்லா விசயங்களையும் என் முன்னே வைத்தார்.


இந்த விசயங்களை பிளாக்கில் எழுதவேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால், நமது நாட்டின் காலாச்சாரம் இந்த அளவுக்கு சீரழியும் போது என் போன்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. நாம் தமிழர்களின் வாழ்க்கை முறையும், காலாச்சாரமும் மற்ற இனத்தவர்களே பாராட்டும் அளவிற்கு பெருமை வாய்ந்தது அல்லாவா.. அப்படியான காலாச்சாரத்தில் பிறந்து வழந்து வரும் நாம், நமது காலாச்சாரம் சீரழியும் போது ஏற்றுக்கொள்ள முடியுமா?
உலகிலேயே அதிக மூளைத்திறன் கொண்டவர்கள் என்று யூதர்களை குறிப்பிடும் வரலாற்று நூல்கள் கூட, யூதர்களுக்கு சமமாக தமிழர்களைன் திறனை வைக்கிறது. அப்படி பாரம்பரியமிக்க இனம் தமிழர் இனம். அதனால் அந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.


அதாவது, பணம் சம்பாதிப்பதற்காக, நூதன முறையில் செயல்படும் ஒரு நெட்வொர்க் தான் இந்த பிரிவு. யாராவது தொடர்புகொண்டு நண்பர்களைப் பெற விரும்புவதாக சொன்னல், சிலர், பதிவு கட்டணம் வசூலிப்பார்களாம். அதிகமானவர்கள் அதுகூட வசூலிப்பது கிடையாதாம்.( இலவசம் என்ற முறையில் மொத்தமாக அள்ளி விடலாம் அல்லவா). நம்பும் விதத்தில் பேசுவதில் கில்லாடிகளாம்.


தொடர்ந்து, நாம் சொன்னது போல சில பெண்களின் / ஆண்களின் தொலைபேசி எண்களைக் கொடுப்பார்களாம், அல்லது சில பெண்களை / ஆண்களின் அறிமுகப்படுத்தி வைப்பார்களாம். அந்த அறிமுகப்படுத்தப் பட்ட்வர்களை நெருக்கமாக பழக வைத்து அவர்களின் மூலம் அந்த நபர் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற்று பணத்துக்காக பிளாக்மெயில் செய்வது தான் அவர்களுடைய வேலை.


இன்னோரு பிரிவு, வரும் நபர்களால் தங்களுக்கு எந்தவித தீங்கும் வராது என்று தெரிந்தவுடன், தங்களிடம் பல பெண்கள் / ஆண்கள் உள்ளார்கள், நீங்கள் விரும்பினால் உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி, ஆண்களை / பெண்களை அவர்களின் வலையில் விழ வைத்து பணம் சம்பாதிப்பதுடன். அவர்கள் வசதியுள்ள பார்ட்டிகள் என்றால் பிளாக் மெயிலும் செய்வார்களாம்.


இந்த பதிவு உஷாராக, எச்சரிக்கையாக் இருப்பதற்காகத்தான் பதிவு செய்கிறேன். ஒரு பெண்ணு கவர்சியாக பேசும்போது ஆரம்பல் நால்லாத்தான் இருக்கும். ஆனால் சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு பலபேர் சீரழிந்ததாகவும். விபரம் தெரியாத நபர்கள் எளிதாக அவர்களின் வலையில் விழந்து விடுவதாகவும் சொன்னார்.


இதைப்பற்றி இன்னும் பல விஷயங்கள் எழுத உள்ளேன். இனி வரும் பதிவுகளில் அவை தொடரும்.

No comments: