Thursday, July 30, 2009

உண்மையான ஞானம் எது?

தங்களைக் கடந்ததே ஆன்மிகம் என்பதில் மாற்றுக் கருத்து இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இன்றைய இளைஞர்கள் ஆன்மிகம் என்றால் குறிப்பிட்ட மதத்துக்கு உரியது, என்ற தவறான புரிதலால தான் அதிக அளவில் வருவது இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால், மதங்கள் ஆன்மிக நிலைக்கு அழைத்துச் செல்லும் ஓடங்கள் தான். என்னுடைய கருத்துப்படி கடவுள் என்று சொல்லப்படுவது 'உச்சகட்ட மனிதம் குடிகொண்ட, நெறிதவறாது வாழும் ஆன்மிகவதியே.!'. இதற்கு என்னைக் கவர்ந்த ஒரு மெய்ஞான நிலையை அடைந்த ஒரு இளைஞனின் வரலாறைக் கூறுகிறேன்.

29 வயதுள்ள இளைஞன் ஒருவன் தன்னுடைய உதவியாளர் ஒருவருடன் பயணம் செய்கிறான். அழகான நதிகள், தெளிவான நீரோடைகள், பூந்தோட்டங்கள் என்று பலவிதமான காட்சிகளைக் ரசித்துச்சென்று கொண்டிருந்த அந்த இளைஞனின் கண்களில், சில விசித்திரமான காட்சிகளைக் கானும் வாய்ப்பு ஏற்படுகிறது. அரசனாக எந்தவித துன்பங்களும் இல்லாமல் ராஜவாழ்க்கை வழ்ந்தவனுக்கு, அந்த காட்சிகள் ஒருவிதமான மனபாதிப்பையும், மனவேதனையை உருவாக்குகிறது. அவன் கண்ட அந்தக் காட்சிகள்.

1) ஊனமுற்ற மனிதன் ஒருவன் நடக்க முடியாமல் வேதனைப்படுவதைப் பார்க்கிறான்.

2) கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் படும் அவஸ்தையை பார்க்கிறான்.

3) தெருவோரமாக வீசப்பட்டு, அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசும் பிணம் ஒன்றைக் காண்கிறான்.

4) இவ்வுலக வாழ்க்கையில் பற்றில்லாத, எல்லாவாற்றையும் துறந்த முனிவன் ஒருவனைப் பார்க்கிறான்.

இந்த நான்கு காட்சிகளும் மனிதனின் வாழ்க்கை பற்றிய பலவிதமான கேள்விகளை அவனுக்குள் உருவாக்குகிறது. ஆனால், கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. இதனால், ராஜவாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுகிறது. மனித வாழ்க்கையின் அர்த்தத்தையும், துன்பங்களை போக்குவதற்கான வழிகளைக் காண்டுபிடிப்பதற்கான வழிகளைக் க்ண்டுபிடிப்பதற்காக துறவியாக மாறுகிறான். ஆனால், மனிதனாக வாழ்ந்தும், துறவியாக மாறியும் தேடலுக்கான விடை கிடைக்கவில்லை.

பதிலை தேடி அலையும் இளைஞன், இறுதியாக மனதை ஒருநிலைப் படுத்தும் தியான நிலையை தேர்ந்தெடுக்கிறான். அதாவது போதி மரத்தின் கீழ் அமர்ந்து கடும் தியானம் செய்கிறான். மனதை ஒருநிலைப்படுத்தும் தியானத்தின் முடிவில் மெய்ஞ்ஞான நிலையை அடைகிறான். அற்புதமான மனித வாழ்க்கைக்கான அர்த்தமும் கிடைக்கிறது, அந்த மெய்ஞான நிலையை அடைந்த இளைஞனுக்கு. அந்த இளைஞன் தான் பொளத்த மத புத்தர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சித்தார்த்தர்.

புத்தர் எப்போதுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ சொல்லியதில்லை. மெய்ஞான நிலையை அடைந்த மனிதன் என்றும், இந்த உலகில் பிறந்த மானிடர்கள் யாராக இருந்தாலும், புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் (தேவைக்கு ஏற்ப ஆசைப்படலாம், தேவைக்கு அதிகமான ஆசையே துன்பத்துக்கு காரணம்).

சித்தார்த்தர் என்ற இளைஞன் 'புத்தர்' என்ற தெய்வீக நிலையை எவ்வாறு அடைய முடிந்தது?. வெளி உலகத்தைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளாமல், ராஜபோக வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த சித்தார்த்தர். மக்களின் துன்பத்தைப் பார்க்கும் போது அவருள் ஒருவிதமான 'மனிதத்தின் நெருடலை' ஏற்படுத்தியது. அந்த நெருடல் தான் மனித வாழ்க்கையின் விடைதேடும் அளவுக்கு அழைத்துச் சென்று தெய்வீக நிலையை அடைய வைத்தது.

புத்தரும் இளைஞனாக இருந்து, மனிதத்தின் விளைவாக மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் செய்து ஞானம் அடைந்தார். புத்தர் குறிப்பிட்ட மதத்தையோ, கடவுளையோ குறிப்பிடவில்லை. இதிலிருந்தெ தெரிந்துகொள்வது, மனிதத்தை அதிகரித்தால் நாமும் ஞானியாகலாம். ஆனால், இன்றைய இளைஞர்கள் மத்தியில் மனிதம் தாமரை இலை மேல் உள்ள நீர்த்துளி போல அரிதாகத்தான் இருக்கிறது. அவர்களாகவே வெளிப்படுத்துவதுமில்லை, வெளிப்படுத்ததற்கு மதங்கள் பற்றிய தவறான புரிதல் தான் காரணம் என்று கருதுகிறேன்.

புத்தரின் வரலாற்று துளிகள்:

சித்தார்த்தருடைய (புத்தர்) பிறப்பும் விசித்திரமானதாகவே இருந்தது. அவருடைய தந்தை இன்றைய நேபாளத்தில் உள்ள கபிலவத்துவின் மன்னனான சுத்தோதனன். தாயார் மாயா. பிறந்தவுடன் பெற்றோர் வைத்த பெயர் சித்தார்த்தன். எழு நாட்களே அந்தக் குழந்தையின் பெயரை அந்தத் தாயால் உச்சரிக்க முடிந்தது. ஏழாவது நாளே சித்தார்தரின் தாயார் மாயா இறந்துவிடார். தாயின் அன்பான அரவனைப்பில் வளரவேண்டிய குழந்தை, தாயின் முகம் தெரியாமல், தாயாரின் தங்கை வீட்டில் வளரும் சூழ்நிலை ஏற்பட்டது. அரசவம்சத்தில் பிறந்தவன் என்பதால் அவனுடைய தேவைகள் எல்லாவற்றையும் தந்தை நிறைவேற்றி வைத்தார். வாலிப வயதில் காதல் வருவது இயற்கை, அதேபோல சித்தார்த்தரின் 15 வயதிலேயே கதல் ரோஜா வளர ஆரம்பித்தது. அவர் காதலித்தது அத்தை மகள் யசோதரையை. இதனால், எந்தவித கஷ்டங்களும் இல்லாமால் காதல் வெற்றியடைந்ததுடன், திருமணமும் அவருடைய 16 வயதில் நடைபெற்றது. காதலின் சின்னமாக ராகுலன் என்ற குழந்தையும் பிறக்கிறது. இதன் பின்பு தான் அவருடைய வாழ்க்கைப்பாதை மாறுகிறது. நினைத்தது எல்லாம் செய்து முடிக்கும் வல்லமை படைத்த ராஜவாழ்க்கை வாழும் மன்னனாக இருந்தும்கூட, 29 வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டு துறவியாகி, ஞானநிலையை அடைகிறார்.

3 comments:

கலையரசன் said...

//மனிதம் தாமரை இலை மேல் உள்ள நீர்த்துளி போல அரிதாகத்தான் இருக்கிறது//

எளிய வார்தைகள் ஆனால், அது சொல்லும் கருத்துகள் லட்சம்!!

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in