Saturday, July 11, 2009

சென்னை நகரமும், பேருந்து பயணமும்..:என் அனுபவம்..!

நான் வசிக்கும் இருப்பிடத்துக்கும் வேலை செய்யும் அலுவலகத்துக்கும் இடையில் 7 கிலோ மீட்டர் தூரம். பேருந்தில் பயணம் செய்து தான் அலுவலகம் போகவேண்டும். இருப்பிடத்திலிருந்து காலை சுமார் 7.30-க்குள் கிளம்பினால் தான், அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் காத்திருத்தலுக்குப் பின் பேருந்து கிடைக்கும். இல்லாவிட்டால் அன்று அலுவலக விதிமுறைக்குட்பட்ட நேரம் கடந்து அலுவலகம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

இதை தவிர்ப்பதற்காகவே காலையில் 7.30 -க்கு முன்னதாகவே பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிடுவேன், வழக்கம் போல பேருந்துக்காக காத்திருக்கவேண்டும். சென்னை நகர பேருந்துகளைப் பற்றி சென்னை வாசிகளுக்கு தெரியும். பேருந்தில் பயணம் செய்து அலுவலகம் செல்வபவர்களுக்கு அதன் அனுபவம் பழகிப்போயன இன்றாக இருக்கும்.
ஆனால், என்போன்ற சில மாதங்களாக சென்னை நகர பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு அது ஒரு புதுவித வித்தியாசமான, அதேநேரத்தில் விசித்திரமான அனுபவமாகத்தான் இருக்கும்.


சென்னை நகரப் பேருந்துகளில் அதிகமானவை (சொகுசுப் பேருந்துகளைத் தவிர்த்து) வாலிபத்தை இழந்து, வாழும் காலத்தையும் கடந்து, முதிர்ந்த வயதில் தள்ளாடி, தள்ளாடி தன்னுடைய பணியை செய்கிறது. திறமைக்கு அதிகமாக உழைப்பது எது..? என்று யாராவது என்னைக் கேட்டால் 'சென்னை நகர பேருந்துகள்' என்று தான் சொல்வேன்.

அந்த அளவுக்கு தயாரிக்கப்படும் போது நிர்ணயிக்கப்பட்ட (ஆண்டு) வயதைக் கடந்து இயங்குகிறது. அதாவது இயக்கப்படுகிறது. பேருந்துகள் நிறுத்தத்தை நெருங்கும் முன்பே இரைச்சலுடன் கூடிய ஒருவித சத்தத்தை இசையாக பாடிக்கொண்டு ( சங்கு ஊதுவது போல ) தான் வரும். அதற்கு சிறப்புக் காரணமும் ஒன்று உண்டு. என்னவென்றால் நாற்பது இருக்கைகளுக்கும் குறைவாகக் கொண்ட நகர பேருந்துகள் குறைந்தது 100 -க்கும் அதிகமான பயணிகளை சுமந்து கொண்டு வருவது தான்.

நான் காத்திருக்கும் நிறுத்தத்தில் குறைந்தது 30, 40 பேர் இருப்பார்கள். சில பேருந்துகள் நிற்காமலே போய்விடும். ஒருசில பேருந்துகள் நிறுத்தத்தை தாண்டி சிறிது தூரம் சென்று தான் நிறுத்தப்படும்.பேருந்தின் வாசலில் உள்ள மூன்று படிகளிலுமே குறைந்தது 15 -க்கும் அதிகமான இளைஞர்கள் (முதியவர்கள் கூட) பயணிக்கின்றனர். சிலவேளைகளில் பெண்கள் கூட இரண்டாவது, மூண்றாவது படிகளில் பயணம் செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட இடத்துக்கு போய்சேர வேண்டுமல்லவா. ஆண்களே அவதிப்படும் போது, பெண்களின் நிலமையைப் பார்க்கும் போது பரிதாபத்துக்கு உரியாதாக இருக்கும்.

படியில் உள்ளவர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே வருவது முடியாத காரியம். ஆனால், பெண்களை மயக்க திறமையைக் காட்டுவதாக எண்ணி ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி ஏறும் இளைஞர்கள் (தவிர்க்க முடியாத காரணத்தால் நானும் படியில் ந்ன்றி பயணம் செய்திருக்கிறேன்) சிலர் இருப்பதால் கிடைக்கும் இடத்தைப் பயன்படுத்தி உள்ளே சென்றுவிடலாம். அடுத்த நிறுத்தத்திலும் ஒரு கூட்டமே இந்த பேருந்துக்காக காத்திருப்பார்கள். நடத்துனர் அவருடைய பாணியில் "உள்ள போப்பா... உள்ள போப்பா" என்று சத்தம் போடுவார்.

உள்ளே போகவெண்டும் என்றால் பேருந்தின் இடது, வலது அல்லது பின்புற (ஏன் முன்புற) கண்ணாடியை உடைத்துக்கொண்டுதான் போகமுடியும். ஒவ்வொரு நிறுத்தத்திலும் கூட்டம் ஏறும் போதும் (இடம் கிடைக்காததால்) நம்முடைய காலனிகள் கூட பயணம் செய்யும் இடமாக மாறிவிடும். நான் மற்றவர்களுடைய காலனிகளிலும் பயணம் செய்திருக்கிறேன். பயணிகளின் நெரிசலினால் ஒவ்வொருவருடைய உடலில் (பலர் குளிக்காமலும், சிலர் பல சுத்தம் செய்யாத ஆடைகளையே அணிந்து வருவதால்) இருந்து வரும் ஸ்மல் -லும் ஒன்று சேர்ந்து ஒருவிதமான அருவருக்கத்தக்க ஸ்மலை உருவாக்குகிறது. அந்த ஸ்மலால் வாந்தி வருவது போல ஒரு உணர்வு இருக்கும். ஆனால், இப்போது பழகிப்போய் விட்டது. அந்த ஸ்மல் இல்லாமல் பயணம் செய்தால், பயணம் செய்த உணர்வே இப்போது ஏற்படுவதில்லை.....

பேருந்தில் நிலத்தகராறுக்குப் (இடம்) பஞ்சம் இருக்காது. வாய்க்கால் வரப்பு தகராறு, என பலவகையான தகராறுகள் நடந்துகொண்டு இருக்கும். நடத்துனர் அவருடைய ஆசணத்தை விட்டு நகருவதில்லை (சென்னையில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்). நாம் எந்த திசையில் இருந்தாலும் அருகில் உள்ளவரிடம் காசு கொடுத்து 'பாஸ் பண்ணுங்க சார்' என்று சொல்லித்தான் பயணச்சீட்டு வாங்க முடியும். அதிலும் ஐந்து பத்து நபர்களிடம் காசு கைமாறி பயணச்சீட்டு நமக்கு வந்து சேருவதற்கு குறைந்தது அரை மணி நேரம் கூட ஆகலாம். அதிலும், சில்லறை இல்லாமல் ரூ. 20, ரூ.50 போன்ற நோட்டைக் கொடுத்தால் சிலவேளைகளில் டிக்கெட்டும் வருவதில்லை, மீதிப்பணமும் வருவதில்லை.

காரணம், பணம் வாங்கியவர் ஏதாவது ஒரு நிறுத்தத்தில் இறங்கி சென்றுவிடுவார். அவருக்கு காலை உணவுக்கு பணம் கிடைத்து விட்டது அல்லவா..

ஜெமினி பாலம் போன்ற இடங்களில் உள்ள ஏற்றங்களில் பேருந்து செல்லும் போது, மூச்சு வாங்கி வாங்கி இழுப்பதைப் பார்த்தால், நமக்கே பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கும். ஓட்டுனர் ஹியர் போடும்போது பார்த்தால் எந்தநேரத்தில் ஹியார் கையோடு வரும் என்று தெரியாத நிலையில் இருக்கும். சில நேரங்களில் (பல தடவை நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்) ஏற்றங்களிலும், சாதாரண இடங்களிலும் ஹார்ட் அட்டாக் (பழுதடைந்து) வந்து பேருந்து நின்றுவிடும்.

அப்படி ஆகிவிட்டால், வேறு பேருந்தில் தான் போகவெண்டும். இவ்வாறு ஒவொரு நாள் பேருந்து பயணமும் பல வகையான அனுபவத்தை கற்றுக் கொடுத்துக்கொண்டோ இருக்கிறது. அனுபவங்கள் எல்லா துறைகளிலும், எல்லா இடங்களிலும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கும். அதேபோல எனக்கும் இது ஒரு வித்தியாசமான பயணமாகவே இருப்பதால் தான் இன்று பதிவாக எழுதுகிறேன்.

2 comments:

துளசி கோபால் said...

அருமை சிவா.

குப்பன்.யாஹூ said...

Noiw last 2 years atleast new buses have been introduced. If you see 2 years back, it was very bad.